உமையாக்களின் வீழ்ச்சிக்கான காரணங்கள்



உமையாக்களின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

இஸ்லாமிய வரலாற்றில் குலபாஉர் ராஷிதீன்களை தொடர்ந்து உமையாக்கள் ஆட்சி ஆரம்பமாகியது . இது முதலாவது பதவி வழி ஆட்சியாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது . உமைய்யா ஆட்சியாளரகள் அவர்களது  வழித்தோன்றல்கள்  தொடராக ஆட்சி செய்து வந்ததால் இவ்வாட்சி உமைய்யா ஆட்சி எனப்படுகிறது . கலிபா  அலி ரழி அவரகலின் கொலையைத் தொடர்ந்து ஈராக்கியர் அலியின் புதல்வர் ஹஸன் ரழி அவர்களையும் ஷாமியர் முஆவியா ரழி அவர்களையும் கலீபாவாக தேர்ந்த்தெடுத்தனர் . இதனை சகித்து கொள்ள முடியாத முஆவியா ரழி அவர்கள் ஈராக்கை நோக்கி பெரும் படையை அனுப்பினார்கள் . அவ்வேளை முஸ்லிம்கள் முஸ்லிம்களால் கொலை செய்யப்படுவதை விரும்பாத ஹஸன் ரழி அவர்கள் தம்மீது சுமத்தப்பட்ட ஆட்சியை முஆவியா ரழி அவர்களுக்கு விட்டுக்கொடுத்தார்கள் .


உமையாக்கள் சுமார் 91 வருடங்கள் இஸ்லாமிய உலகை ஆட்சி புரிந்தனர் . இந்த அடிப்படையில் முஆவியா , அப்துல் மலிக் ,வலீத் , ஹிஷாம் , உமர் இப்னு அப்துல் அஸிஸ் போன்றவர்கலால்  இஸ்லாமிய உலகிற்கு பல்வேறு வகையான வலுக்கல் சேர்க்கப்பட்டன . இந்த வகையில்   ஆட்சி செய்த போதிலும் பல காரணங்களால் உமையா ஆட்சி வீழ்ச்சி அடைந்தது . உமைய வீழ்ச்சிக்கு  அப்பாஸியர் மேட்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து நோக்குவோம் .


உமையாக்களின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

சுமார் ஒரு நூற்றாண்டு கால அளவு ஆட்சி செய்த உமையாக்கள் அகன்ற பரந்த ஒரு இஸ்லாமிய சாம்ராச்சியத்தை கொண்டு இருந்தனர் . இது ஆசிய , ஆபிரிக்க ,ஐரோப்பா ஆகிய கண்டங்களில் இஸ்லாமியக் கொடியை ஏந்திச் சென்றது . இவ்வாறு பல கண்டங்களுக்கு அறிவொளியை ஏந்திச் சென்ற இவ்வாட்சி சுமார் ஒரு நூற்றாண்டின் பின்னர் வீழ்ச்சி கண்டது. இவ்வீழ்ச்சிக்கான காரணங்களை நோக்குவோமாயின் அவை சமைய , சமூக ,அரசியல் , பொருளாதாரக் காரணிகளாகத் தொழிற்பட்டுள்ளமையை அவதானிக்க முடியும்.


1. இஸ்லாமிய ஷரீஆ பேணப்படாமை

நேர்வழிப்பெற்ற நான்கு கலீபாக்கள் சமயத்தையும் அரசியலையும் ஒன்றாகக் கருதி அல்குரான் அஸ்ஸுன்னாஹ் வழி  நின்று தமது ஆட்சியை நிலை நாட்டினர் . அவர்களது காலத்தில் சமயம் வேறு அரசியல் வேறு எனப் பரித்து நோக்கப்படவில்லை . உமையாக் கலீபாக்கள் சமயத்தையும் அரசியலையும் பிரித்து நோக்கியதோடு அரசியலில் சமய வழிகாட்டல்களைப் புறக்கணித்தனர்.மேலும் அரச சபைகள் ஆடம்பர கேளிக்கை விடுதியாக மாற்றம் பெற்றது . இதனால் இஸ்லாத்தின் மீது அதிகப் பற்றும் ஆர்வமும் கொண்டவர்கள் இவர்களது இத்தகைய செயற்பாட்டால் வெறுப்புற்று விலகிக் கொண்டனர்.

2. கோத்திர சண்டைகள்

நபியவர்களால் முதன் முதலாக அழித்து ஒழிக்கப்பட்ட இன  , நிற , பிரதேச  , கோத்திர வேறுபாடுகள் உமையா ஆட்சியில் தூண்டிவிடப்பட்டன . சில கலீபாக்கள் சில கோத்திரங்களுக்கு விசேட சலுகைகளை வழங்கியமை இதற்கு காரணமாக அமைந்தது . இதனால் கோபமுற்ற ஏனைய கோத்திரங்கள் கலீபாக்களிலிருந்து சலுகைகளை பெற்ற கோத்திரங்களுக்கு எதிராக செயட்பட்டனர் . இதற்கு உதாரணமாக ஹலறிகள் - ஹிம்யாரிகளுக்கும் இடையிலும் அவ்வாறே ஹிஜாஸிய அரபிகள் - முளரிகளுக்கும் இடையில் வளர்ந்த முரண்பாடுகளைக் குறிப்பிடலாம் .


3. ஒழுங்கற்ற வாரிசு நியமனம்

வாரிசு உரிமையைப் பொறுத்த மட்டில் கலீபாவாக இருப்பவரின் முத்த புதல்வர் அடுத்த வாரிசாக நியமிப்பதே முறையாகும் . முஆவியா (ரலி ) , முதலாம் யஸீத் (ரஹ் ) , முதலாம் மர்வான் (ரஹ் ) போன்றவர்கள் மாத்திரமே வாரிசு உரிமையைப் பேணி வந்தனர் . ஏனைய கலீபாக்கள் இவ்வொழுங்கு முறையைப் பின்பற்றவில்லை . இதனால் நியாயமான  முறையில் வாரிசு உரிமையை பேண வேண்டியவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

உதாரணம் : அப்துல் மலிக் (ரஹ்) தனது  இரு புதல்வர்களையும் அடுத்தடுத்து வாரிசாக நியமித்தமை .
சுலைமான் தனது சிறிய தந்தையின் மகனான உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)  அவர்களை வாரிசாக நியமித்தமை .

இவ்வாறான ஒழுங்கற்ற வாரிசு நியமனம் உமய்யா குடும்பத்தினுள் முரண்பாடுகளை தோற்றுவித்தது .

4. கலீபாக்களின் பலவீனம்

உமையா ஆட்சியில் பின்வந்த ஆட்சியாளர்கள் திறமை குன்றியவர்களாகவும் போராடும் வலிமையற்றவர்களாகவும் காணப்பட்டனர் . இவர்களது இராச்சிய விஸ்தரிப்பிற்கேற்ப நிர்வாகம் விரிவடைந்து இருக்கவில்லை . கலீபாக்கள் அரசியல் இராஜ தந்திரங்கள் அற்றவர்களாகவும் எதிரிகளை வெற்றி கொள்ளும் தந்திரோபாயம்  அற்றவர்களாகவும் காணப்பட்டனர் . இதனால் நாட்டின் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவு , மக்களது அதிருப்தி , எதிரிகளின் தந்திரோபாயம் என்பவற்றை அவர்கள் கண்டு கொள்ளவில்லை .

5. காலியான திறைசேரி
                                         
உமைய்யா ஆட்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பைத்துல் மால் நிதியை மக்களது தேவைக்காக பயன்படுத்தாது தமது ஆடம்பர சுகபோகங்களுக்காக பயன்படுத்தினர் . இதனால் வெறுப்படைந்த இராணுவ , அரச அதிகாரிகள் மாற்றுத்திசையை வரவேற்க ஆரம்பித்தனர் .

6.அகீதா ரீதியான பிளவுகள்

உமய்யா ஆட்சியின் ஆரம்பம் முதல் கவாரிஜ்களும் , ஷீயாக்களும் உமைய்யாக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேட்கொண்டு வந்தனர் . கலீபா அலி ரழி அவர்களுக்கும் முஆவியா ரழி அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பதவி பிரச்சினை காரணமாக பிரிந்து சென்ற பிரிவினர் அன்று முதல் ஆட்சி அதிகாரம் அஹ்லுல் பைத்தினருக்கே உரித்தானது என வாதிட்டு வந்தனர் . இவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதட்காகவும் தமது கொள்கைகளை உமைய்யா ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் கிளர்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர் . இந்நடவடிக்கை உமைய்யா ஆட்சியை இராணுவ பொருளாதார ரீதியாக பலம் இழக்க செய்தது .

7.மக்கள் அதிருப்தி கொண்டமை.

உமைய்யா ஆட்சியில் அரபிகள் அல்லாத முஸ்லிம்கள் அதிருப்தி கொண்டிருந்தனர் . குறிப்பாக பாரசீக முஸ்லிம்கள் முக்கியமானவர்களாக காணப்பட்டனர் . இவர்கள் உமைய்யா ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டதோடு அவர்களிடம் இருந்து ஜிஸ்யா வரியும் அறவிடப்பட்டன . மேலும் மாவலிகளும் புறக்கணிக்கப்பட்டனர் . இதனால் இவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதல்லாம் உமைய்யாக்களுக்கு எதிராக செயற்பட்டனர் .


இவ்வாறான காரணங்கள் உமைய்யாக்களின்  வீழ்ச்சிக்கு அப்பாஸியர் மேற்க்கொண்ட  நடவடிக்கையே முதன்மையான காரணமாக விளங்குகிறது . அந்த வகையில் இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை நோக்கலாம் .


உமைய்யாக்களின் ஆட்சியின் வீழ்ச்சிக்கு அப்பாஸியர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர் .

1.திறமைமிக்க கலீபாக்களை கொலை செய்தனர் . அதில் ஒருவராகத்தான் உமர் இப்னு அப்துல் அஸிஸ் விளங்குகிறார் . இவர் ஹிஜ்ரி இல் ஆட்சி பீடம் ஏறிய எட்டாவது உமைய்யா கலீபா ஆவர் . இவர் 2 ஆண்டுகள் தன ஆட்சி செய்தார் . இக்காலத்தில் பல பணிகளை மக்களுக்கு செய்தார் .

இவர் பொதுமக்களின் நலனில் அதிகம்  கவனம் செலுத்தினர் . முன்னைய கலீபாக்களால் இடம்பெற்ற அநியாயங்களை களைவது தனது முதற்பணி என கருதினர் . உமைய்யா ஆட்சியில் சீர்கெட்டு இருந்த பைத்துல்மாலை மீண்டும் சீர்படுத்தினார்கள் . நிர்வாக ஊழல்களையும் மோசடிகளையும் தடை செய்தார்கள் . மேலும் உமைய்யா ஆட்சியின் இதுவரை காலமும் மக்களை துன்புறுத்தி ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர் . அநியாயமான முறையில் பொதுமக்களிடம் இருந்து அறவிடப்பட்ட வரியை நீக்கினார்கள் .

மேலும் கல்விப்பணியை சிறந்த முறையில் மேற்கொள்ள பாடசாலையை நிறுவினார் . இராணுவத்தில் கடமையாற்றிய வீரர்களுக்கு முறையாக இவரது ஆட்சியில் சம்பளம் வழங்கப்பட்டது . இது அரசின் உறுதிப்பட்டிற்கு உறுதுணையாக அமைந்தது . மேலும் யூத , கிறிஸ்தவர்களால் இளக்கப்பட்ட  அவர்களது தேவயாலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது . இதனால் பிற மதத்தவர்களால் கலீபா அவர்கள் மிகவும் கவரப்பட்டார்கள் .

இவரது காலத்தில் ரோமா ராஜ்யமே முஸ்லிம்களுக்கு எதிரான பலம் வாய்ந்த அரசாக இருந்தது . அந்த நாட்டிட்கும் இஸ்லாத்துக்கும் இடையே ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக நிலவிய அரசியல் தகராறு இன்னும் தீரவில்லை . ஆனால் ரோமா இராஜ்யம் கூட உமர் இப்னு அப்துல் அஸிஸ் (ரஹ்) அவர்களின் உயர்ந்த ஒழுக்க சீலத்தினால் கவரப்பட்டது . கலீபா அவர்கள் இவ்வுலக வாழ்வை நீந்த பொழுது உரோமச்சக்கரவர்தி பின்வருமாறு கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது .'' துறவி ஒருவர் உலக இன்பங்களைத் துறந்து ஏகாந்தமான ஓரிடத்தில் தியானத்தில் ஈடுபட்டு இருந்தால் நான் கிஞ்சிற்றும் ஆச்சரியப்பட மாட்டேன் . அனால் இந்த மனிதனின் காலடியில் ஒரு மாபெரும் பேரரசே இருக்க அவர் அதனை ஒதுக்கி விட்டு ஒரு பக்கீரின் வாழ்க்கையை மேற்கொண்டு இருந்தமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது ''. இவ்வாறு உரோமச்சக்கரவர்தி  புகழும் அளவு நல்லாட்சியை மேற்கொண்டார் .

இரண்டரை ஆண்டு காலமாக பாடுபட்டு அறியாமைக்கால ஆட்சிமுறையாக மாறிப்போன அரசியல் வாழ்க்கையின் பல்வேறு துறைகளையும் புரட்சிகரமாக மாற்றியமைத்தார் . விரைவிலேயே உமைய்யாக்கள் இவ்விறைபக்தி மிக்க மனிதருக்கு எதிராக செயல்பட தொடங்கினர் . இஸ்லாத்தின் வாழ்க்கை எழுச்சியில் அவர்கள் தமது சுகபோக வாழ்வின் சரிவை,மரணத்தை கண்டனர் . ஆதலால் அதன் மறுமலர்ச்சி பணியினை அவர்களால் சகிக்க முடியவில்லை . இறுதியில் கலீபாவுக்கு எதிராக அவர்கள் சாதி செய்தனர் .

ஒரு நாள் அவரின் அடிமை கடுமையான ஒரு நஞ்சை அவர்களுக்கு கொடுத்து விட்டான் . தான் நஞ்சூட்டப்பட்டு விட்டேன் என்பதை அறிந்தும் கலீபா அவர்கள் அவனை அழைத்து காரணத்தை கேட்டார்கள் . அவன் இந்த பணியை முடிக்க தனக்கு 1000 தீனார் லஞ்சமாக தரப்பட உள்ளதை கூறினான் . உடனே பொது நிதியத்தில் இருந்து அவனுக்கு 1000 தீனார் கொடுக்க செய்து அவனை உடனே தப்பி ஓடும்படி பணித்தார்கள் . இவ்வாறு தன இளம் பருவத்தில் கி .பி 719 இல் இவ்வுலகை விட்டு அகல மரணமடைந்தார் . இவ்வாறு அப்பாஸியர் திறமைமிக்க ஆட்சியாளர்களை வீழ்த்தியது இவ்வாட்சியை கைப்பற்ற அவர்களுக்கு இலகுவாய் அமைந்தது .


2. அப்பாஸியர்கள் மக்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தினார்கள் .

இதன் மூலம் உமைய்யா ஆட்சியை பலவீனப்படுத்தி அப்பாஸியர் ஆட்சியை கைப்பற்றினர் . அரபு அல்லது இருந்த முஸ்லிம்கள் சுன்னி மத்தியில் அதிருப்தியை திருத்த உமைய்யா அரசு ஒரு அரபு மையமாக கொண்ட மாநிலமாக கருதப்படுகிறது .  இது மதத்தில் முஸ்லிம்களாக இருந்தாலும் இனரீதியாக அரேபியாக இருந்தவர்கலால் நடத்தப்படுகிறது . அரபு அல்லாத முஸ்லிம்கள் தங்களது ஓரளவு சமூக நிலைப்பாட்டை எதிர்த்தனர் . மேலும் உமைய்யா ஆட்சிக்கு அப்பாஸியர் எதிர்ப்பில் எளிதில் ஈர்க்கப்பட்டனர் .


அரேபியர்கள் அதிகாரத்துவம் மற்றும் இராணுவத்தில் ஆதிக்கம் செலுத்தினர் . மேலும் அரேபியாவிற்கு வெளியே உள்ள உள்ளூர் மக்களிடமிருந்து தனித்தனி கொட்டைகளில் தங்க வைக்கப்பட்டனர் .  இஸ்லாத்திடற்கு மாரிய பிறகும் அரேபியர் அல்லாதவர்களோ அல்லது மாவாளிகளோ இந்த நகரங்களில்   வாழ முடியவில்லை . அராபியர் அல்லாதவர்கள் அரசாங்கத்திற்கு வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை அல்லது உமய்யா இராணுவத்தில் அதிகாரி பதவிகளை வகிக்க முடிய வில்லை . முஸ்லீம் அல்லாதவர்களுக்கு வரி உமய்யா ஆட்சியின் கீழுள்ள முஸ்லீம் அல்லாதவர்கள் இதே உத்தரவுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அரேபியர்களுக்கும் அரேபியர் அல்லாதவர்களுக்கு இடையிலான இன  ரீதியான திருமணம் அரிதானது . இது நிகழும் போது ஓர் அரபு ஆணுக்கும் அரபு அல்லாத பெண்ணுக்கும் இடையில்  மட்டுமே இது அனுமதிக்க்கப் பட்டது . அதே நேரத்தில் அரபு அல்லாத ஆண்கள் பொதுவாக அரபுப் பெண்களை திருமணம் செய்ய சுதந்திரமில்லை .


ஓர் அரபு அல்லாதவர் இஸ்லாத்திற்கு மாற விரும்பினால் அவர்கள் தங்கள் பெயர்களை விட்டு விட வேண்டியது மட்டுமல்லாமல் இரண்டாம் தர குடிமகனாகவும் இருக்க வேண்டி இருந்தது . அரபு அல்லாதவர்கள் ஓர் அரபு பழங்குடியினரால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் . இருப்பினும் அவர்கள் உண்மையில் பழங்குடியினரின் பெயரை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் . ஏனெனில் இது அரபு இன தூய்மையை மாசுபடுத்தும் என எண்ணினார் .இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் பூர்வீக மக்களில் சுமார் 10 % பேர் என்றாலும் உமய்யா ஆட்சியின் கீழ் வாழும் பெரும்பாலான மக்கள் முஸ்லிம்கள் அல்ல .மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அரேபியர்கள் காரணமாக இந்த சதவீதம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது  .

படிப்படியாக அரபு அல்லாத முஸ்லிம்கள் அரபு முஸ்லிம்களை விட அதிகமாக இருந்தனர் . இது அரபு பிரபுக்களிடையே  எச்சரிக்கையை ஏற்படுத்தியது . சமூக ரீதியாக இது ஒரு பிரச்சினையாக இருந்தது . ஏனெனில் உமையாக்கள் இஸ்லாத்தை பிரபுத்துவ அரபு குடும்பங்களின் சொத்தாக கருதினர் . உமைய்யா அமைப்பிற்கு ஒரு பெரிய நிதி  சிக்கல் ஏற்பட்டது . அரபு அல்லாத மக்களிடம் இருந்து இஸ்லாம் சமயத்திற்கு மாறியவர்கள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குரான் விதித்த ஜிஸ்யா வரியை செலுத்துவதை நிறுத்தி விட்டால் உமையப் பேரரசு சிக்கலை எதிர்கொள்ளும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் இல்லாததால் இறுதியில் அரபு அல்லாத முசுலிம்கள் அப்பாஸியர்களை ஆதரிக்க வழிவகுத்தனர் . கி.பி.741 ஆம் ஆண்டில் முஸ்லீம் அல்லாதவர்கள் அரசாங்கப்  பதவிகளை வகிக்க  முடியாது  என்று கூறப்பட்டது . அப்பாஸியர்கள் இதனைப் பயன்படுத்தி அரபி மற்றும் அஜமி என்ற பிரிவை ஏற்படுத்தி இதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தனர்.











































































































Comments

Popular posts from this blog

Top latest Trending Technology

Latest Technology Trending